நவம்பரில் பள்ளி திறக்க ஸ்டாலின் எதிர்ப்பு – மாற்று அறிவிப்பு வெளியிட கோரிக்கை !!

0
MK Stalin
MK Stalin

நவம்பர் 16 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரி திறப்பு அறிக்கைக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். மாற்று அறிவிப்பு வெளியிட கோரிக்கை வைத்துள்ளார்.

பெற்றோர்கள் பதற்றம்

கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் பள்ளி செல்வது இல்லை. ‘ஆன்லைன்’ வழியாக படம் படிக்கின்றனர். இந்நிலையில், நீண்ட மாதத்திற்குப்பின், பள்ளிகள் வரும் 16ம் தேதி திறக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

MK Stalin

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ நவம்பர் 16 ம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும், கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிறுவனங்கள் திறக்கும் என எடப்பாடி பழனிசாமி அவசரக்கோலத்தில் அறிவித்திருக்கிறார். மாணவ, மாணவியரின் பாதுகாப்பினை முழுமையாக ஆய்வு செய்த பிறகு எடுக்கப்பட்ட முடிவாக இது தெரியவில்லை. முதல்வரின் அறிவுப்பு வந்தது முதல், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருமே பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது என்ற அச்சத்திலும், பதற்றத்தில் தவிப்பதைக் காண முடிகிறது.

ஜனவரியில் திறக்கலாம்

கொரோனா இரண்டாம் அலை வீசும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது. இது போன்ற தாக்குதலுக்கு ஆளாகி, மீண்டும் ஊரடங்கு நோக்கி பல நடுகல் சென்று கொண்டிருக்கும் நிலையில், பள்ளி, கலோரி திறப்பு அவசியமா என எல்லா தரப்பு மக்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது. எனவே, நவம்பர் 16 ஆம் தேதிக்குப் பதில், அடுத்த ஆண்டு 2021 ஜனவரி இறுதியில் அப்போதைய சூழலை பொறுத்து பள்ளி மற்றும் கல்லூரியை திறக்கலாம்,’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here