திரையரங்குகளை 2 மாதங்கள் வரை கூட மூடி வைக்கலாம் – பாரதி ராஜா கோரிக்கையால் கடுப்பான திரையரங்கு உரிமையாளர்கள்!!

0
cinema theatre
cinema theatre

கொரோனா காரணமாக திரையரங்குகள் யாவும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு திரையரங்குகளை மூடிவைக்க தயார் என திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார். 10ஆம் தேதியில் முதல் திரையரங்குகள் திறக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் புதிய பிரிச்சனை ஆரம்பித்துள்ளனர்.

திரையரங்குகள் திறப்பு??

கொரோனா காரணமாக கடந்து 8 மாத காலமாக திரையரங்கு மூடப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு நவம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளை திறக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது. எனவே திரையரங்குகளை திறப்பதற்கு உரிய செயல்களை ஆரமித்தனர். இந்நிலையில் VPF கட்டணங்களை எங்களால் செலுத்த இயலாது என்றும் அதனை திரையரங்கு உரிமையாளர்கள்தான் செலுத்த வேண்டும் என்றும் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா கூறியுள்ளார்.

Theatres

அவர் பலமுறை தெரிவித்தும் திரையரங்கு உரிமையாளர்களும் புரொஜெக்டர் நிறுவனங்களும் தொடர்ந்து VPF கட்டணங்களை வசூலித்து வருகிறார்கள். இனிமேல் எங்களால் அதனைச் செலுத்த இயலாது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும்வரை திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என்று நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா கூறியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாரதிராஜாவின் கேள்விக்கு பதிலளித்த தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், இந்நேரத்தில் பேசப்பட வேண்டிய பிரச்னை இல்லை இது என்று கூறியுள்ளார். இந்த புதிய ப்ரிச்னையால் திரையரங்குகள் திறக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here