என்னது.., ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்களா? ? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!!

0
என்னது.., ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்களா? ? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!!
என்னது.., ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்களா? ? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!!

தமிழகத்தில் விவசாயிகள் பசுவின் பாலை கொள்முதல் செய்து அதை பதப்படுத்தி ஆவின் பால் பண்ணை பாக்கெட் பாலாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. அப்பேற்பட்ட இந்த பால் பண்ணையில் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை என்றும் சிறார்கள் பணியமர்த்தப்பட்டதாகவும் அவர்களுக்கும் முறைப்படி சம்பளம் கொடுக்கவில்லை என்பதால் அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லபடுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர், ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் வேலை பார்ப்பதாக வெளி வந்த செய்தி முற்றிலும் பொய். அங்கு 14 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இத்தனை லட்சம் பேரா? .., முழு டேட்டா உள்ளே!!

மேலும் இந்த திடீர் போராட்டத்திற்கு காரணம் ஒப்பந்ததாரர்களுக்கும், பணிபுரியும் ஒரு சிலருக்கும் இடையே ஏதோ கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. அதன் விளைவாக சிலர் பிரச்சனை உருவாகியுள்ளது. மேலும் உண்மை நிலவரத்தை அறிந்த பின்னரே செய்திகளை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here