தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இத்தனை லட்சம் பேரா? .., முழு டேட்டா உள்ளே!!

0
தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இத்தனை லட்சம் பேரா? .., முழு டேட்டா உள்ளே!!
தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இத்தனை லட்சம் பேரா? .., முழு டேட்டா உள்ளே!!

தமிழகத்தில் பட்ட படிப்பை முடித்துவிட்டு ஏகப்பட்ட இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அரசாங்கம் பல திட்டங்களை செயல்படுத்தி கொண்டே தான் இருக்கிறது. இன்னும் பல அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அதாவது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும், சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில் பட்டப்படிப்பு வரையான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், முதுநிலை படிப்பு, பொறியியல், மருத்துவம் உட்பட தொழில் படிப்பின் தகுதியை சென்னை அல்லது மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி இந்தப் பதிவை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வரவேண்டும்.

அரசு ஊழியர்களே., இனி ரூ.1,68,636 வரை ஊதிய உயர்வு? ஹேப்பி நியூஸ்!!!

இந்நிலையில், தமிழகம் முழுவதும் மொத்தம் 66 லட்சத்து 70 ஆயிரத்து 825 பேர் அரசு வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் மே 31ம் தேதி வரையிலான புள்ளி விவரத்தின் படி, வேலை வேண்டி பதிவு செய்த ஆண்களின் எண்ணிக்கை 30,98,879 பேரும், அதே போல் பெண்களின் எண்ணிக்கை 35,71,680 பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் 266 பேர் மூன்றாம் பாலினத்தோர் சேர்ந்தவர்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here