
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து, வில் ஜாக்ஸ் விலகியதை அடுத்து, RCB அணி நியூசிலாந்து வீரரை தங்களது அணியில் இணைத்துள்ளது.
RCB:
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக, 10 அணிகளும் சில தினங்களுக்கு முன்னரே தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளன. இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் வேளையில் தான், முன்னணி வீரர்கள் பலர், காயம் காரணமாக விலகுவதாகவும் அறிவித்து வருகின்றன. இந்த வகையில், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தின் மூலம், RCB அணியானது, இங்கிலாந்தின் வில் ஜாக்ஸை 3.2 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால், இவர் தசைநார் பிடிப்பு காரணமாக சமீபத்தில் ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால், RCB அணியானது இவருக்கு தகுந்த மாற்று வீரரை தேடும் நிலைக்கு உள்ளானது. இந்நிலையில், அடிப்படை விலையான ரூ. ஒரு கோடிக்கு நியூசிலாந்தின் ஆல் ரவுண்டரான மைக்கேல் பிரேஸ்வெலை இவருக்கு மாற்று வீரராக தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐபிஎல்லில் கேள்வி குறியான ஸ்ரேயாஸ் ஐயர் இடம்…, அப்போ கேப்டனை மாற்றுமா KKR அணி??
இந்த வருட தொடக்கத்தில் இந்தியா வந்த நியூசிலாந்து அணியில் மைக்கேல் பிரேஸ்வெல், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், சதம் அடித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் RCB அணியில் இணைந்திருப்பது, RCB அணிக்கு பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.