ஐபிஎல்லில் கேள்வி குறியான ஸ்ரேயாஸ் ஐயர் இடம்…, அப்போ கேப்டனை மாற்றுமா KKR அணி??

0
ஐபிஎல்லில் கேள்வி குறியான ஸ்ரேயாஸ் ஐயர் இடம்..., அப்போ கேப்டனை மாற்றுமா KKR அணி??
ஐபிஎல்லில் கேள்வி குறியான ஸ்ரேயாஸ் ஐயர் இடம்..., அப்போ கேப்டனை மாற்றுமா KKR அணி??

முதுகு வலியால் அவதிக்கு உள்ளாகி உள்ள ஸ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல்லில் பங்கு பெறுவது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர்:

இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து முதுகு வலி காரணமாக பாதியிலேயே விலகினார். இந்த வலியின் காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் இருந்தும் இவர் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவருக்கான மாற்று வீரரை பிசிசிஐயானது இன்னும் அறிவிக்காத நிலையில், இவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதும் சந்தேகம் தான் என தகவல்கள் பரவி வருகின்றன. ஐபிஎல் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் இவரது வருகை அணி நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது.

இந்திய ஜாம்பவான் சாதனையை சமன் செய்த கேன் வில்லியம்சன்…, இரட்டை சதம் விளாசி அசத்தல்!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் தொடங்க இரு வாரமே உள்ளதால், ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல்லில் பங்கு பெறுவாரா? இல்லையா? என்ற கேள்விக்கு இரண்டு மூன்று நாட்களுக்குள் அணி நிர்வாகம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அணி நிர்வமானது இவரது உடல் நிலையை கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேளை ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல்லில் பங்கு பெறவில்லை என்றால், வேறு கேப்டனை நிர்வாகம் தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here