தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் – அதிர்ச்சியில் படக்குழுவினர்!!

0

பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரிலீசான சில மணிநேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் தடையை மீறி வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

இணையதளத்தில் வெளியீடு

மக்கள் அனைவரும் திரையரங்குகளில் திரைப்படத்தை காண வேண்டும் என்ற நோக்கில் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டிருந்தது. தற்போது திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையதளம், படம் வெளியான சிலமணி நேரங்களிலேயே அதன் இணையதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

“மாஸ்” ஆக இருக்கும் “மாஸ்டர் – எப்படி இருக்கு??

மாஸ்டர் படத்தை இணையதளத்தில் வெளியிட கூடாது என தமிழக அரசு தடை விதித்திருந்தது. அந்த தடையை மீறி படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், ‘மாஸ்டர் திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. நீங்கள் எல்லாரும் படத்தை திரையரங்கில் சென்று காண்பீர்கள் என்று நம்புகிறோம். படத்திலிருந்து வெளியான வீடியோ கிளிப்ஸ்களை கண்டால் அதை தயவுசெய்து ஷேர் செய்யாதீர்கள். அனைவருக்கும் நன்றிகள்’ என்று பதிவிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here