என்னது நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறேனா???அதிர்ந்து போன மாஸ்டர் பட நடிகை!!!

0

சினிமா உலகில் ஒரு குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை சுரேகா வாணி. இவர் பற்றிய ஒரு சில தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது இவர் தன்னை விட 10 வயது சிறிய பையனுடன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அறிந்த சுரேகா வாணி அதிர்ச்சியில் உறைந்து உள்ளார்.

நடிகை  சுரேகா வாணி தமிழில் முன்னணி நடிகர்களாக  வலம் வரும் விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் வெற்றி படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தமிழை தவிர்த்து தெலுங்கிலும் தனது முத்திரை பதித்தவர்.

இந்நிலையில் அவரின் கணவரும், சின்னத்திரை இயக்குனருமான  சுரேஷ் தேஜா கடந்த 2019ஆம் ஆண்டு உடல் நல குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர்களுக்கு சுப்ரிதா என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் கணவரை இழந்து வாடும் அவருக்கு தனது மகளுடன் கழிக்கும் பொழுது மட்டுமே மகிழ்ச்சியான தருணங்களாக இருந்து வருகிறது.

அந்த இடத்தை முதன் முதலா பார்த்தேன் தலைகீழானே… ரசிகர்களை அய்யய்யோ என பதற வைத்த தர்ஷா!!!

மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் ரீல்ஸ் வீடியோக்கள் பிரபலமான ஒன்று. இந்நிலையில் தற்போது இவர் பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து உள்ளது. அதாவது சுரேகா வாணி தன்னை விட பத்து வயது சிறிய ஒரு நபரை இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியானது.

இந்த தகவல் சுரேகா வாணியை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், தனக்கு இரண்டாவது திருமணம் பற்றிய எண்ணம் துளி கூட இல்லை. தான் இப்பொழுதும்  மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதாகவும், இது போன்ற தேவை இல்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கடும் கோபத்துடன் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here