முருங்கைக்காய், முட்டை காம்பினேஷன்ல இப்படி ஒரு டிஷ் சாப்பிட்டிருக்கீங்களா? இல்லனா இத உடனே செஞ்சு பாருங்க!!!

0

காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் நமது தோற்ற பொலிவுக்கும் உறுதுணையாக இருக்கும் ஒன்று. பல வித சத்துக்களை தன்னகத்தே கொண்டது காய்கறிகள். அதே போல முட்டையிலும் பல சத்துக்கள் நிரம்பி உள்ளது. இந்நிலையில் தற்போது உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், முட்டை ஆகியவற்றை வைத்து ஒரு அருமையான அவியல் எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்

முட்டை – 4

முருங்கைக்காய் – 1

உருளைக்கிழங்கு – 3

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

தேங்காய் துருவல் – 1 கப்

சீரகம் – 1/4 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் – 1

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

பூண்டு – 1

மிளகாய் வற்றல் – 2

கடுகு – 1/4 தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

முதலில் 4 முட்டையை தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும். பின்னர்  வெந்த முட்டைகளை எடுத்து நீள வாக்கில் இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதையடுத்து தேங்காய் துருவல், சீரகம், மஞ்சள் தூள், பூண்டு, சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு கடாயை  வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு, நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின்னர் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்த பின்னர் நீளவாக்கில் நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்காய் சேர்த்து வேக விட வேண்டும்.

முக்கால் வாசி வெந்த பிறகு அதில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து கொள்ளவும். ஓரளவிற்கு தண்ணீர் இருக்கும் சமயத்தில் வெட்டி வைத்த முட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கொள்ளவும். தண்ணீர் வற்றி அவியல் பதத்திற்கு வந்த பிறகு அதில் கறிவேப்பிலை தூவி இறக்கி கொள்ளவும். தற்போது சுவையான முட்டை, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு அவியல் ரெடி. மேலும்  இதில் உருளைக்கிழங்கு அல்லது முருங்கைக்காய் இரண்டில் ஏதாவது ஒன்று மட்டும் கூட வைத்து இந்த டிஷ் செய்யலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here