12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களே.., இன்று முதல் பள்ளிகளில் மார்க் ஷீட் விநியோகம்!!

0
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களே.., இன்று முதல் பள்ளிகளில் மார்க் ஷீட் விநியோகம்!!
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களே.., இன்று முதல் பள்ளிகளில் மார்க் ஷீட் விநியோகம்!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய 8.17 லட்ச பேரில் 91.45 சதவீதம் மாணவர்கள், 96.38 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தோல்வியடைந்தவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 19ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன்படி 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று முதல் அந்தந்த பள்ளிகளில் தங்களது ஒரிஜினல் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதாவது “பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

12 ஆம் வகுப்பு CBSE பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.., இந்த இணையத்தில் சரிபார்த்து கொள்ளலாம்!!!

பின்னர் மதிப்பெண் பட்டியலில் பள்ளி முத்திரை, கையொப்பம் போன்றவற்றை நிரப்பி தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். மாணவர்களிடம் ஒப்படைக்கும் போது பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவைகளில் பிழை ஏதும் உள்ளதா? என சோதித்துக் கொள்ள அறிவுரை வழங்க வேண்டும். ஏதேனும் பிழை இருப்பின் தேர்வு இயக்குனரகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

இந்த அசல் சான்றிதழை உயர்கல்வி மாணவர் சேர்க்கை உட்பட அவசர தேவைகளுக்கு மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here