சிம்பிள் மேக்கப்பில் கொள்ளை கொள்ளும் மஞ்சிமா மோகன்.. வர்ணிக்கும் ரசிகர்கள்!!

0

நடிகை மஞ்சிமா மோகன், தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கியூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இந்த பதிவில் காணலாம்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடிப்பவர் நடிகை மஞ்சிமா மோகன். 1997-ம் ஆண்டு கலியூஞ்சல் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இவர். அப்படத்தில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது.

தொடர்ந்து திரை துறையின் மீது உள்ள ஆர்வத்தால் 2016-ம் ஆண்டு சிம்புவின் நடிப்பில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் கதா நாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார்.

இவர் நடிப்பில் 2017-ம் ஆண்டு இப்படை வெல்லும், சத்ரியன்  போன்ற படங்கள் வெளியானது. நடிகர் கவுதம் கார்த்திக் உடன் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்து வெளியான தேவராட்டம் படம் வசூல் ரீதியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தற்போது பெரிதாக படவாய்ப்புகள் இல்லாததால் போட்டோ ஷூட்டில் கவனம் செலுத்தி தன் அழகான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here