கர்பமானதை அடுத்து பாரதி கண்ணம்மாவில் தொடர்ந்து நடிப்பாரா வெண்பா?? ஆவலில் ரசிகர்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் பரீனா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா பரீனா

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்து வருபவர் தான் பரீனா. இந்த சீரியலில் படுவில்லியாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். நிஜத்தில் இந்த அளவிற்கு வில்லியாக இருக்க முடியுமா?? என்று பார்த்தால் அது சந்தேகம் தான். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வெண்பா நிலைத்துள்ளார்.

பாரதியின் முன்னாள் காதலி ஹேமாவை கொலை செய்ததில் இருந்து தற்போது பாரதியின் மனதில் கண்ணம்மாவின் குழந்தை தன்னுடையது கிடையாது என நம்ப வைத்தது வரை பல கேடி வேலைகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் கதையில் அதிக சுவாரசியம் இருக்கும் இந்த வேளையில் வெண்பா திடீரென ஒரு முக்கிய விஷயத்தை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளார்.

இதனால் அடுத்தடுத்த சீன்கள் முக்கியம் என்பதால் இதில் யார் நடிப்பார்கள், வெண்பா இல்லாமல் கதைக்களம் எப்படி நகரும் என்று பல கேள்விகள் ரசிகர்களிடம் ஓடிக்கொண்டுள்ளது. இந்த நேரத்தில் வெண்பா இருந்தால் மட்டுமே சீரியல் விறுவிறுப்பாகும்.

இதனால் சீரியலில் வெண்பாவிற்கு பதிலாக வேறு ஒருவரை அறிமுகப்படுத்துவர்களா? என்றும் தெரியவில்லை. பிரியா என்ற கதாபாத்திரம் வேறு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது கூட இதற்கு தானா?? என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here