நேருக்கு நேர் வந்த ரயில்கள் மோதி விபத்து – 200 க்கும் மேற்பட்டோர் காயம்!!!

0

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று இரவு நேருக்கு நேர் வந்த இரண்டு மெட்ரோ ரயில்கள் மோதி, 213 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கோலாலம்பூரில் நேற்று இரவு 8.45 மணி அளவில் பழுதுபார்க்கப்பட்ட காலியாக வந்த ரயில் ஒன்று, அதே ரயில் தடத்தில் எதிரே வந்த பயணிகள் ரயிலில் நேருக்கு நேர் மோதியது. எதிர் திசையில் வந்த பயணிகள் ரயிலில் மொத்தம் 213 பேர் பயணித்துள்ளனர். இதில் 166 பேர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 47 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட காவல்துறை அதிகாரி, முகம்மது ஜைனல் அப்துல்லா கூறும் போது, இந்த விபத்திற்க்கான காரணத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம்..,ஆனால் ரயில்களின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தவறான தகவல் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கூறினார்.மேலும் இந்த விபத்து 23 ஆண்டுகால மெட்ரோ ரயில் வரலாற்றில் ஏற்பட்ட முதல் பெரிய விபத்து இது என்று போக்குவரத்துறை அமைச்சர் வீ கா சியோங் கூறியுள்ளார்.

உலகின் மிக உயரமான இரட்டை கோபுரங்கள் என்றழைக்கப்படும் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களிருந்து 100 மீட்டர் தூரத்தில் இந்த விபத்து நிகந்துள்ளது.சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட இந்த விபத்தின் வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here