போனை எடுத்து இனி ” ஹலோ” சொல்லக்கூடாது – இது தான் சொல்லணும்! மாநில அரசு திடீர் உத்தரவு!!

0

போனை எடுத்தவுடன், இனி ஹலோ என்று சொல்வதற்கு பதிலாக, “வந்தே மாதரம்” என்றுதான் சொல்ல வேண்டும் என மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு உத்தரவு:

மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா கட்சியின் சார்பாக முதல்வர் ஏக்நாத் சின்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது மாநிலத்தின் பணிபுரியும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று, அரசின் சார்பாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது மாநிலம் முழுவதும் உள்ள ஊழியர்கள், போனை எடுத்ததும் வழக்கமாக ஹலோ என்று சொல்வதை தவிர்த்து, இனி வந்தே மாதரம் என்றுதான் சொல்ல வேண்டும். வந்தே மாதரம் என்பது நம் தேசத்தின் கலாச்சாரம் என்றும், ஹலோ என்ற மேற்கத்திய வார்த்தையை புறக்கணித்து ஊழியர்கள் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிம்புவுடன் கூட்டணி அமைக்கும் முக்கிய பிரபலம்.., சினிமா வட்டாரங்களுக்கு ஷாக்.., தெறிக்கவிட்ட அப்டேட்!!

மாநிலத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும், அரசின் சார்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அதிரடி உத்தரவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here