மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை – டீன் தகவல்

0
plasma
plasma

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட்டு உள்ளதாக மருத்துவமனை டீன் அறிவித்து உள்ளார்.

பிளாஸ்மா சிகிச்சை:

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தினமும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கொரோனாவிற்கு உரிய மருந்து கண்டுபிடிக்கும் வரை ஹைட்ராக்சி குளோரோகுயின், ரெம்சிடிவிர் போன்ற மருந்துகள் நோயாளிகளை குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை பல்வேறு நாடுகளில் நல்ல முறையில் பலன் அளித்து உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

ஜூன் 15ல் தேர்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது – ஜூலையில் நடத்த உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்..!

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்து இருந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோதனை முயற்சியாக இது தொடங்கப்பட்டு உள்ளது. பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா பாதித்து அபாயக்கட்டத்தில் இருந்த 54 வயது நபர் குணப்படுத்தப்பட்டு உள்ளதாக மருத்துவமனை டீன் சங்குமணி தெரிவித்து உள்ளார். எனவே மற்ற நோயாளிகளுக்கும் பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here