10 ஆண்டுகளில் மதுரை அழிய போகிறதா ?

0

இப்போ இருக்க லைப் ஸ்டைல் பார்க்கும் போது பருவநிலை மாற்றம் ரொம்ப மாறிட்டே இருக்கு. அந்த வரிசைல, இப்போ ஒரு எச்சரிக்கை குடுத்துருக்காங்க. பருவநிலை மாற்றம் பத்தி இந்திய வானிலத்துறை ஒரு ஆய்வறிக்கை குடுத்துருக்காங்க. காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டம் அடிப்படையில எச்சரிக்கை வெளியிட்டுருக்காங்க. இந்த லிஸ்ட்ல முக்கியமா மதுரை மாவட்டம் தான் இருக்கு இது மதுரை மாவட்டத்துக்கு ஒரு பெரிய எச்சரிக்கையா சொல்லிருக்காங்க Observed Rainfall variability & changes over Tamil Nadu State. இந்த ஆய்வு அறிக்கையை புனேல உள்ள இந்திய வானிலத்துறை மையம் குடுத்துருக்காங்க. கடந்த 30 ஆண்டுகள் 1989 – 2019 வரை, மழைப்பொழிவு, வறண்ட வானிலை தினம், அதிக மழைப்பொழிவு இந்த மாதிரி பல விவரங்களை எடுத்துருக்காங்க. இந்த ஆய்வுல தமிழகத்திலேயே மழைப்பொழிவு குறைவா இருக்க மாவட்டம் மதுரை தான். இங்கு 30 ஆண்டுகள மழைப்பொழிவு கடுமையாகவே குறைந்திருக்கு. அதிக மழைப்பொழிவு இருக்க மாவட்டம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை,தூத்துக்குடி. இனி வர 10 ஆண்டுகள் ரொம்பவே முக்கியமானது. இந்த நேரத்துல எதுவும் செய்யலன்னா மதுரை மாவட்டம் காலநிலை பேராபத்திற்கு உள்ளாகும் அபாயம் இருக்கதா சொல்லிருக்காங்க. எம்.பி எஸ்.வெங்கடேசன் இதற்காக முதல்வருக்கு கோரிக்கை குத்துருக்காங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு திட்டம், பசுமை போர்வையை 33% அதிகரிக்க வேண்டும். காடுகளை பராமரிக்க வேண்டும். இது போல பல திட்டங்கள் வேணும்ன்னு சொல்லீருக்காங்க. இந்த செய்தி மதுரை மக்களுக்கும் சரி பெரிய எச்சரிக்கையா தான் இருக்கு.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here