ஆப்கானிலிருந்து விடைபெற்ற அமெரிக்க ராணுவம் – விடைபெற்ற கடைசி வீரரின் கலக்கம்!!!

0

ஆப்கான் நாட்டில் இருந்து தற்போது அமெரிக்கா வீரர்கள் அனைவரும் முழுமையாக வெளியேறி விட்டனராம். இது குறித்த செய்திகள் தான் இன்று அனைத்து ஊடகங்களிலும் எழுதப்பட்டு வருகின்றது. தாலிபான்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை 20 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தீவிரவாதி பின் லாடன் அமெரிக்காவில் இருந்த இரட்டை கோபுரத்தினை விமானம் கொண்டு அழித்தனர். இதற்கு எதிராகவே ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா படைகள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றி கைப்பற்றி இருந்தனர். தற்போது ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் அங்கு இருக்கும் அமெரிக்கா படைகள் மொத்தமாக தங்களது நாட்டினை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறி இருந்தனர். அதற்கு இன்று வரை அவர்கள் அனைவருக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. சொன்னது போலவே தற்போது அமெரிக்கா படை வீரர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் நாட்டினை விட்டு வெளியேறி உள்ளனர். அதே போல் பல மக்கள் தங்களது சொந்த நாட்டை விட்டே வெளியேறும் அவலம் அங்கு நடைபெற்று வருகிறது. பலர் இதற்காக காபூலின் விமான நிலையமே கதி என்று கிடக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here