என்ற ஓமனக்குட்டி இத்தனை நாள் எங்க இருந்தீங்க…!லாங் கேப்பிற்கு பிறகு தரிசனம் கொடுத்த மடோனா!!!

0

தமிழ், மலையாள மொழி ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான முகம் மடோனா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். மேலும் இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது அழகு கொஞ்சும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

மலையாள மொழி படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் மடோனா. அதாவது மலையாளத்தில் படு ஹிட் படமான பிரேமம் என்ற படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். அதை தொடர்ந்து தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைக்கு வந்தார்.

அதன் பின்னர் தமிழில் கவண், ப பாண்டி , ஜிங்கா , வானம் கொட்டடும் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். மேலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் , கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். எனினும் மற்ற முன்னணி நடிகைகளை ஒப்பிடுகையில் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் குறைவு தான். இருப்பினும் அவர்களை குஷிப்படுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபகாலமாக அவரின் ரசிகர்களுக்கு தரிசனம் தராமல் இருந்தார். இதையடுத்து மீண்டும் அவர் ரசிகர்களுக்கு தன்னுடைய தரிசனத்தை புகைப்படங்கள் மூலம் அளித்து உள்ளார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here