தொடர்ந்து அதிகரிக்கும் தினசரி தொற்று பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,467 பேருக்கு கொரோனா!!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,467 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் சற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக 39,486 பேர் இத்தொற்றில் இருந்து நேற்று மீண்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மே, ஜூன் மாதங்களில் உச்சம் தொட்டது. பின்னர் ஜூலை மாத இறுதியில் இருந்து இந்த தொற்று பாதிப்பு படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

 

ஆனால் அதற்குள் முன்றாம் அலை பற்றிய எச்சரிக்கையை நிபுணர்கள் விடுத்தனர். ஆனால் இரண்டாம் அலை போல மூன்றாம் அதிதீவிரம் வாய்ந்ததாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மூன்றாம் அலை அக்டோபர் மாதம் உச்சம் தொடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மட்டும் 25,467 புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது வரை இத்தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 3,19,551 ஆக அதிகரித்துள்ளது. 39,486 பேர் கொரோனவிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியா முழுவதும் 58.59 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here