உங்களை யோசித்து எனக்கு தூக்கமே வரவில்லை வருத்தத்தில் புலம்பும் ராதிகா…!குதூகலத்தில் கொண்டாடும் கோபி!!!

0

விஜய் டிவியின் டாப் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய கதைக்களமாக, கோபி தனக்காகவும் மயூக்காகவும் தான் அடிபட்டு இவ்வளவு கஷ்டப்படுகிறார் என எண்ணி வருத்தத்தில் கோபியிடம் புலம்புகிறார் ராதிகா. இதை நினைத்து குதூகலத்தில் உள்ளார் கோபி.

பாக்கியலட்சுமி சீரியல்  

பாக்கியலட்சுமி சீரியலில் அடிபட்ட கோபி தன்னை கவனித்து கொள்ள யாரும் இல்லை என ராதிகாவுடன் போன் வாயிலாக பொய் கூறி அவரின் அனுதாபத்தை சம்பாதிக்கிறார். இந்நிலையில் இன்று, ராஜேஷ் கைது செய்த விசயத்தை  கூறுகிறார்.   மேலும் தனக்கு யாரும் இல்லை என நினைப்பதாக கோபி கூற அதற்கு ராதிகா நாங்கள் இருக்கிறோம் என்று கூறுகிறார்.

அந்த சமயத்தில் அவரின் கதவை கோபியின் அப்பா தட்டி அவரை பற்றி விசாரித்து விட்டு வெளியில் படுத்து கொள்வதாக கூறுகிறார். அதன் பிறகு வருத்தத்தில் இருக்கும் ராதிகா கோபிக்கு மெசேஜ் ஒன்றை அனுப்புகிறார். அதை பார்த்த கோபி உற்சாகத்தில் ஆட்டம் போடுகிறார்.

இதையடுத்து ஜெனியின் அப்பா மற்றும் அம்மா கோபியை பார்க்க வீட்டிற்கு வருகின்றனர். அதன் பிறகு அவரின் உடல்  நலம்  குறித்து பாக்கியாவிடம் விசாரிக்கின்றனர். கோபியின் விபத்து குறித்து, அவருக்கு ஏற்பட்ட காயம் குறித்து பேசிக்கொள்கின்றனர். மேலும் ஜெனியின் அம்மா மற்றும் அப்பா கோபியை பார்க்க செல்லும் போது பாக்கியா ஜெனியிடம் மாமாவை கூப்பிடு வருமாறு சொல்கிறார்.

அப்பொழுது மாடியில் வலியுடன் இறங்குவது போல நடித்து கொண்டே இறங்குகிறார் கோபி. அதன் பின்னர் அவரின் நலம் குறித்து ஜெனியின் அப்பா விசாரிக்கிறார். அதற்கு கோபி தனக்கு பட்ட அடி பற்றியும், வலிகள் பற்றியும் கூறுகிறார்.மேலும் டாக்டர் பல டெஸ்ட்களை எடுக்க சொன்னதாகவும் கூறுகிறார்.

அதற்கு ஜோசப் சின்ன அடி பட்டதுனால பரவாயில்லை பெரிய அடியாக இருந்தால் கஷ்டம் என கூறுகிறார். அதன் பிறகு ஜெனி, தன் அம்மாவிடம் ஏன் நீ ஆண்ட்டிக்கு அடிபட்டதை பற்றி கேட்கவில்லை என கோபித்துக்கொள்ள, அங்கு வரும் பாக்யாவிடம் நலம் விசாரிக்கிறார் ஜெனியின் அம்மா. இதையடுத்து இந்த வீட்டில் பாக்கியாவை அடிபட்டதையும், அதன் பிறகு இந்த வீட்டில்  நடந்ததையும் கூறுகிறார்.

அதற்கு அவரின் அம்மா ஜெனியை வேலைக்கு போகுமாறு கடுமையாக சாடுகிறார். இதையடுத்து  ஹாய்யாக  காலை நீட்டிக்கொண்டு பாட்டு கேட்டு கொண்டிருக்கிறார் கோபி, அப்போது ராதிகா அவருக்கு போன் செய்கிறார். அப்பொழுது வழக்கம் போல நடித்து கொண்டே நைட் முழுவதும் தூங்கவில்லை என கூறுகிறார். அதற்கு ராதிகா உங்களை யோசித்து எனக்கு தூக்கமே வரவில்லை என கூறுகிறார். அதை கேட்டு சந்தோஷமடைகிறார் கோபி.

அதன் பின்னர் எந்த மருத்துவமணையில் இருக்கீங்க சொல்லுங்க என ராதிகா கேட்க அதற்கு ஏதோதோ சொல்லி அவரை சமாளிக்கிறார் கோபி. இப்படி இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் பாக்கியா கதவை  தட்டுகிறார். அப்பொழுது நர்ஸ் வந்துவிட்டதாக கூறி போன் கட் செய்கிறார் கோபி. அப்பொழுது கோபிக்காக காபீ கொண்டு வருகிறார் பாக்கியா. அதோடு இன்றைய கதை முடிவடைகிறது.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here