பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு – புது வீட்டில் ரொமான்ஸ் செய்யும் கண்ணன் ஐஸ்வர்யா!!!

0

பல ரசிகர்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில்  புது வீட்டிற்கு செல்லும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா அங்கு தங்களின் புது வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்குகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், தங்க இடமின்றி தவித்த கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு அண்ணன் மூர்த்தியின் நண்பர் என்று அறிமுகமாகும் நபரால் தங்க ஒரு வீடு கிடைக்கிறது. இதனால் குடும்பம் மற்றும் கண்ணன் ஐஸ்வர்யா சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இன்றைய கதையில் , பெரியவர் வீட்டிற்கு செல்லும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா வீட்டின் வாடகை மற்றும் மற்ற விஷயங்கள் பற்றி பேசுகின்றனர். வீட்டின் சாவியை கொடுத்துவிட்டு அந்த பெரியவர் கிளம்புகிறார்.

அதன் பின்னர் ஐஸ்வர்யாவிடம், இதுபோன்றதொரு இடத்தில் தங்க வைப்பதற்காக மன்னிப்பு கேட்கிறார். அதன் பிறகு , ஐஸ்வர்யா கண்ணனை பார்த்து எதுனால என் மேல் லவ் வந்தது என கேட்கிறார்.

அதற்கு கண்ணன், எல்லா பொண்ணுங்க கிட்ட பேசினாலும் ஓ கிட்ட பேசுறப்ப தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு  என்று சொல்கிறார். அதன் பின்னர் இருவரும் தங்களின் வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டே படுத்து விடுகின்றனர்.

இதையடுத்து இருவரும் இவ்வளவு நாள் தாங்கள் பட்ட கஷ்டங்களை பேசிக்கொண்டே ஒருவர் கையை ஒருவர் பிடித்து கொண்டு ரொமான்ஸ் செய்கின்றனர்.  அதன்  பிறகு கண்ணன், இப்போதைக்கு இது நமக்கு வேண்டாம், இப்பொழுது தான் தங்க வீடு கிடைத்து உள்ளது. நான் வேலைக்கு போகணும் நீ படிக்க வேண்டும் என கூறுகிறார். இதை கேட்டு கோவப்படும்  ஐஸ்வர்யா கண்ணனை திட்டி விட்டு தூங்கிவிடுகிறார்.

இதனையடுத்து, தன் வீட்டிற்கு வரும் மூர்த்தி தனத்திடம் தனது அம்மா பற்றி கேட்க, அவரின் நிலை அறிந்து குடும்பமே வருத்தப்படுகிறது. அதனால் டாக்டரிடம் கூப்பிட்டு போகலாம் என்று ஆலோசித்த போது, அவரின் உடம்புக்கு ஒன்றும் இல்லை மனசு தான் காரணம் என தனம் மற்றும் கதிர் கூறிகின்றனர். அம்மாவை நினைத்து குடும்பமே வருத்தப்பட்டு பேசிக்கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் கடை கணக்கு பார்க்க செல்கின்றனர் மூர்த்தி, ஜீவா மற்றும் கதிர். கணக்கில் ரூ.4000 குறைவதாக மூர்த்தி கூறுகிறார். அதன் பின்னர் ஜீவாவிடம் அந்த கணக்கு என்ன என்று பார்க்குமாறு மூர்த்தி கூறிக்கொண்டு உள்ளே செல்ல, அந்த வேளையில் கதிர் ஜீவாவிடம் இந்த பணத்தை நீ கண்ணனுக்கு கொடுத்தாயா? என கேட்கிறார். அதை கேட்டு அதிர்ந்த ஜீவா ஆமாம் என்பது போல தலை அசைத்து உண்மையை கூறுகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here