உள்ளாட்சி பொறியாளர் பணி நியமனம்.., இனி TNPSC தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுமா? வெளியான அறிவிப்பு!!!

0
உள்ளாட்சி பொறியாளர் பணி நியமனம்.., இனி TNPSC தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுமா? வெளியான அறிவிப்பு!!!
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் TNPSC தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாக உள்ள 1933 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் தகுதி வாய்ந்த நபர்கள் http://tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தில் பிப்ரவரி 9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பாமக தலைவர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது உள்ளாட்சி பொறியாளர்கள் நேரடி நியமன தேர்வில் பல்வேறு மோசடிகள் நடக்கிறது. இதனால் தகுதி வாய்ந்த பலரும் வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தற்போது கூட 1933 பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளனர். இதற்கு நேரடி ஆள் தேர்வு அறிவிக்கையை ரத்து செய்த TNPSC தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here