வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி தீவிரம்.,, களத்தில் இறங்கிய ஆசிரியர்கள்!!

0
வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி தீவிரம்.,, களத்தில் இறங்கிய ஆசிரியர்கள்!!

இந்தியாவில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. அந்த வகையில் “ஆதார் கருடா செயலி மூலமாக” ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஆதார் எண் இணைப்பை அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.

ஆதார் எண் இணைப்பு:

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும், இதனால் கள்ள வாக்குகள் தடுத்து நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இதன் அடிப்படையில், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கியது.

இப்பணிகளை வரும் 2023 மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விரும்புபவர்கள், புதிய படிவம் 6B ஐ நிரப்புவதன் மூலம் செய்யலாம். மேலும் பொதுமக்கள் வசதிக்காக, வாக்காளர் பதிவு அலுவலர் வீடு வீடாக சென்று விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடிக்கு 1 அலுவலர் வீதம் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர், வீடு வீடாக சென்று ஆதார் கருடா செயலி மூலமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here