லெஜண்ட்ஸ் லீக்: அரைசதம் விளாசிய கிறிஸ் கெய்ல்…, இந்திய மஹாராஜாஸ் அணியை வென்ற வேர்ல்ட் ஜெயண்ட்ஸ்!!

0
லெஜண்ட்ஸ் லீக்: அரைசதம் விளாசிய கிறிஸ் கெய்ல்..., இந்திய மஹாராஜாஸ் அணியை வென்ற வேர்ல்ட் ஜெயண்ட்ஸ்!!
லெஜண்ட்ஸ் லீக்: அரைசதம் விளாசிய கிறிஸ் கெய்ல்..., இந்திய மஹாராஜாஸ் அணியை வென்ற வேர்ல்ட் ஜெயண்ட்ஸ்!!

லெஜண்ட்ஸ் லீக் தொடரில் இந்திய மஹாராஜாஸ் அணியானது, வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

லெஜண்ட்ஸ் லீக்:

கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் லீக் தொடரில், இந்திய மஹாராஜாஸ் அணியானது வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியில், கவுதம் கம்பீருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் இந்திய மஹாராஜாஸ் அணியை வழி நடத்தினார். இதையடுத்து தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் பில்டிங்கை தேர்வு செய்து இருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் விளைவால், முதலில் பேட்டிங் செய்த இந்திய மஹாராஜாஸ் அணியில் உத்தப்பா 5, ரீதிந்தர் சோதி 2, யூசுப் பதான் 3, ஸ்டூவர்ட் பின்னி 0 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதையடுத்து, அணியின் ஸ்கோரை உயர்த்த மன்விந்தர் பிஸ்லா (36) மற்றும் சுரேஷ் ரெய்னா (49) என போராடிய நிலையில், இந்திய மஹாராஜாஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்திருந்தனர்.

IPL 2023: 10 அணிகளுக்கான கேப்டன்கள் யார் யார்?? ஃபுல் லிஸ்ட் இதோ!!

சற்று எளிய இலக்கை துரத்திய வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியில், ஆல் ரவுண்டரான கிறிஸ் கெய்ல் (57) இந்தியாவின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இவரை ஷேன் வாட்சனும் (26) அதிரடி காட்ட வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி 18.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த இந்திய மஹாராஜாஸ் அணி 3வது இடத்தை பிடித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here