அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக ஆதார் விபரங்கள் புதுப்பிக்கப்படும்.., மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!

0
அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக ஆதார் விபரங்கள் புதுப்பிக்கப்படும்.., மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!
அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக ஆதார் விபரங்கள் புதுப்பிக்கப்படும்.., மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!

இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாகி வருகிறது. மேலும் கல்வி நிறுவனம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதார் அட்டை அத்தியாவசிய ஆவணமாக உள்ளது. இதனால் இந்த ஆதாரில் நுகர்வோர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் சரியான முறையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் பலரும் இந்த ஆதாரில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ள இ-சேவை மையங்களில் சேவை கட்டணம் ரூ.50 பணம் செலவழித்து புதுப்பித்து வருகின்றனர். இதையடுத்து தற்போது இவர்களுக்கு இந்த சேவையை முற்றிலும் இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் இருந்து தற்போது வரை புதுப்பிக்காதவர்கள் myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் புதுப்பித்து கொள்ளலாம்.

நாட்டில் 100% ரேஷன் கார்டுகள் டிஜிட்டல் மயமாக்கம்.., மத்திய மந்திரி கொடுத்த விளக்கம்!!!

மேலும் இந்த இலவச சேவை ஆன்லைன் மூலம் மார்ச் 15 (நேற்று) முதல் ஜூன் 14ம் தேதி வரை வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாறாக இ-சேவை மையங்களுக்கு சென்றால் வழக்கம் போல் கட்டணத்தை வசூல் செய்வார்கள் என்றும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here