“கர்ணன்” திரைப்படத்தின் டீஸர் – நடிகர் தனுஷ் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!!

0

“கர்ணன்” படத்தின் டீஸர் கூடிய விரைவில் வெளிவரும் என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் உள்ளனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் இரு பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கர்ணன் திரைப்படம்

நடிகர் தனுஷ் தனது கைவசம் பல திரைப்படங்களை வைத்துள்ளார். இதனை அடுத்து அவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் “கர்ணன்” இந்த திரைப்படத்தினை “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தினை இயக்கிய மாரி செல்வராஜன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படியாக இருக்க இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடியே நடைபெறும் – தேர்வுத்துறை தகவல்!!

இந்த படத்தில் இருந்து சமீபத்தில் முதல் பாடலான “கண்டா வர சொல்லுங்க..,” என்ற பாடல் வெளியானது. தமிழரின் பண்பாட்டினை விளக்கும் நாட்டுப்புற பாடலாக இந்த பாடல் அமைந்ததால் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. அதே போல் இதற்கு அடுத்ததாக “தேனிசை தென்றல்” தேவா குரலில் “பண்டாரத்தி புராணம்” என்ற பாடல் வெளியானது. இந்த பாடலும் அனைவர் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியான சூழலில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவர் போட்ட டீவீட்டில் “கர்ணன் டீஸர் ..வெரி சூன்” என்று பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்து இருக்கின்றனர். அந்த திரைப்படத்தின் பாடல்களை போலவே டீசரும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here