‘திரையரங்கில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதிக்க கூடாது’ – ஐகோர்ட் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!!

0

திரையங்குகள் 100% பார்வையாளர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்ததை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

100% பார்வையாளர்களுடன் திரையரங்கங்கள்:

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதத்தில் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. அதன் பிறகு சில தளர்வுகள் அறிவிக்கபட்டு கடந்த அக்டோபர் 31ம் தேதி அன்று 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்படலாம் என மாநில அரசு அனுமதியளித்தது. ஆனால் அப்போது பரவத்தொடங்கிய புதிய கொரோனா காரணமாக மீண்டும் ஜனவரி 31வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளை 100% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதியளிக்கும்படி பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதை ஏற்ற தமிழக அரசு 100% பார்வையாளர்களுடன் திரையரங்களுகளை திறக்க சமீபத்தில் அனுமதியளித்தது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் எதிர்ப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவினை எதிர்த்து மனு ஒன்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஆனந்தி மற்றும் M.M.சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் வழக்கறிஞர்கள் ராம்குமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் இந்த மனுவினை தாக்கல் செய்தனர்.

madras high court
madras high court

அதில் “100% பார்வையாளர்களுடன் திரையரங்களுக்கு செயல்படலாம் என தமிழக அரசு அனுமதியளித்திருப்பது சட்ட விதிகள் மற்றும் பேரிடர் விதிமுறைகளுக்கு எதிரானது. 100% பார்வையாளர்களுக்கு மருத்துவ குழு முறையான அனுமதி வழங்காத நிலையில் அரசின் இந்த முடிவை ரத்து செய்யவேண்டும். எங்களது இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த நீதிபதிகள், இந்த மனுவை வழக்காக மாற்றி தாக்கல் செய்ததால் அவசர வழக்காக ஏற்று நாளையே விசாரிக்க தாங்கள் தயாராக உள்ளதாக தெரிவித்தனர். அரசின் இந்த முடிவினை எதிர்த்து இரு நாட்களுக்கு முன்பு மருத்துவர் ஒருவர் காணொளி வெளியிட்டிருந்தது வைரலானதை தொடர்ந்து, தற்போது மனு தாக்கல் செய்திருப்பது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here