தமிழகத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – ஆக.17ல் குறை தீர்ப்பு நாள்!

0
தமிழகத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - ஆக.17ல் குறை தீர்ப்பு நாள்!
தமிழகத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - ஆக.17ல் குறை தீர்ப்பு நாள்!

விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர்ப்பு கூட்டம் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஓய்வூதியம் பெறும் நபர்களின் குறைகள் குறித்து கலந்தாலோசித்து தீர்வு காணப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

குறைதீர்ப்பு கூட்டம்:

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2003ம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை அரசு ஊழியர்கள் எதிர்த்தனர். ஏனெனில் இது ஊழியர்களுக்கு பண பலன்களை அளிக்கவில்லை. அதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படவில்லை நடைமுறையில் தான் இருந்து வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார்.

ஆனால் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை. தொடர்ந்து போராட்டங்களும் கோரிக்கைகளும் வலு பெற்று வருகிறது. இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அதாவது 2003ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை தெரிவிக்கும் வண்ணம் அவ்வப்போது ஓய்வூதியர்கள்‌ குறைதீர்க்கும்‌ கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ ஓய்வூதியர்கள்‌ குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

அதனால் ஓய்வூதியம் பெறுவதில்‌ ஏதேனும் பிரச்சினைகள்‌ இருப்பின்‌ ஓய்வூதியதார்ர்கள் அது குறித்த கோரிக்கை மனுவை 08.08.2022-ம்‌ தேதிக்குள்‌ விருதுநகர்‌ மாவட்ட ஆட்சியருக்கு இரட்டைப்‌ பிரதிகளில்‌ அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன்‌ விவாதித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் அனுப்பப்படும் மனுவில் ஒய்வூதியர்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ மனு என குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here