தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டம் – மாநகராட்சி அறிமுகம்!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டம் - மாநகராட்சி அறிமுகம்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டம் - மாநகராட்சி அறிமுகம்!

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களிடையே ஆங்கில புலமை மற்றும் வாசிக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து செல்லலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழக பள்ளி மாணவர்:

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலுமே மாணவர்களின் கல்வி திறன், கற்பனை திறன் மற்றும் வாசிக்கும் திறனை மேம்படுத்த நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த புத்தகங்களை மாணவர்கள் நூலகத்திலேயே வைத்து தான் படிக்க வேண்டும். இந்நிலையில், பள்ளி மாணவர்களிடையே சரளமாக ஆங்கிலம் பேச மற்றும் படிக்கும் திறனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக நூலகத்தில் உள்ள புத்தங்களை மாணவர்களுக்கு வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய தீர்மானம் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது மற்றும் அவர்களிடையே ஆங்கில புலமையை அதிகப்படுத்துவது, வேலைவாய்ப்பை அதிகரிக்க பெரிதளவில் உதவும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயமாக நூலக அலுவலர் இருக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, தினமும் பள்ளி மாணவர்கள் புத்தங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க ஊக்குவிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் தினமும் அந்த புத்தகத்தை படிக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாதமும் எந்த மாணவர் அதிகளவில் புத்தகங்களை எடுத்து படித்துள்ளாரோ அந்த மாணவரின் பெயரை வகுப்பு கரும்பலகையில் எழுதி ஊக்குவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே புத்தகத்தை ஒரு மாணவர் 10 நாட்கள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மாணவர்களை ஆங்கிலத்தில் பேச ஊக்குவிக்கும் வகையில் பேச்சு, கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல், ஸ்பெல் பீ போன்ற போட்டிகளை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here