EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – PPO எண்ணை தெரிந்து கொள்ளும் வழிமுறைகள்!

0
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - PPO எண்ணை தெரிந்து கொள்ளும் வழிமுறைகள்!
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - PPO எண்ணை தெரிந்து கொள்ளும் வழிமுறைகள்!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வூதியதாரர்களுக்கு தனிப்பட்ட PPO எண் வழங்கப்படும். தற்போது எப்படி PPO எண்ணை கண்டுபிடிப்பது என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PPO எண்:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் சேர்ந்துள்ள சந்தாதாரர் ஓய்வு பெறும்போது அந்த ஓய்வூதியதாரருக்கும் தனிப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு ஆணை (PPO) எண் வழங்கப்படுகிறது. அதாவது, அந்த 12 இலக்க PPO எண் ஒவ்வொரு ஓய்வூதியதாரருக்கும் தனிப்பட்ட எண்ணாகும் மற்றும் அனைத்து தகவல் தொடர்புகளுக்கும் அந்த எண் முக்கியமான குறிப்பு எண்ணாக செயல்பட்டு வருகிறது. தற்போது எப்படி ஓய்வூதியக் கொடுப்பனவு ஆணை (PPO) எண்ணை தெரிந்து கொள்வது என்பதை பார்க்கலாம்.

முதலில், EPFO ன் அதிகாரபூர்வமான இணையதள முகவரியான www.epfindia.gov.in என்கிற பக்கத்திற்கு செல்ல வேண்டும். பின்னர், ஆன்லைன் சேவையின் கீழ் இருக்கும் Pensioner’s portal என்கிற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். பின்பு, உங்களது PPO எண்ணை அறிந்து கொள்ளலாம். இதனை அடுத்து, உங்களது வங்கி கணக்கு எண் அல்லது PF கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இந்த விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்ததும் PPO எண், Member ID மற்றும் ஓய்வூதிய வகை தொடர்பான அனைத்து விவரங்களும் வழங்கப்படும்.

தற்போது எப்படி ஓய்வூதிய நிலையை சரிபார்ப்பது என்பதை பார்க்கலாம். முன்பு செய்ததை போலவே www.epfindia.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று ஆன்லைன் சேவையின் கீழ் இருக்கும் Pensioner’s portal என்கிற பகுதியை கிளிக் செய்து, அலுவலக ஐடி மற்றும் PPO எண் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து கிளிக் செய்ய வேண்டும். மேலும், PPO எண்ணில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய நினைத்தால் உங்களது அலுவலகத் தலைவர் அல்லது ஓய்வூதியம் வழங்கும் ஏஜென்சியை தொடர்பு கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here