தமிழக பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய மாநில அரசுகள் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

கல்வி உதவித்தொகை:

இந்தியாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில கூடிய ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பாக கல்விக்கு உதவும் வகையில் மாதந்தோறும் அல்லது வருடாந்திர அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மை மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகைகள் மூலம் மாணவர்கள் இடை நிற்றல் இன்றி கல்வியை தொடர்கின்றனர். இதன் மூலம் மாணவர்கள் பொருளாதார ரீதியாக சிரமமில்லாமல் கல்வி பயின்று வருகின்றனர். இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் பணம் பெற சில நிபந்தனைகள் உள்ளன.

அதனடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த கல்வித் தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள் இறுதி ஆண்டு தேர்வில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

இத்தகைய தகுதியுடையோர் மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும், தொழிற்கல்வி மாணவர்களுக்கு அக்டோபர் 31ம் தேதி வரையிலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் www.minorityaffiars.gov.in/schmes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிப்பது குறித்த விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here