ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவரின் உருக்கமான கடைசி பேஸ்புக் பதிவு!!

0
kerala flight accident
kerala flight accident

கொரோனா தொற்றால் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் மாட்டிக்கொண்டுள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர வந்தே பாரத் என்னும் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்து அழைத்து வருகிறார்கள்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

கோழிக்கோடு விமான விபத்து 

நேற்று கேரளவிற்கு துபாயில் சிக்கி தவித்த இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஏற்பாடு செய்தது. ஏர் இந்தியா ஐ.எக்ஸ்.-1344 மூலம் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடு அழைத்து வர ஏற்பாடு செய்த்து அந்த விமானத்தில் மொத்தம் 185 பயணிகளும் 6 விமான பணியாளர்களும் பயணம் செய்தனர்.

kerala flight accident
kerala flight accident

இந்தியாவில் 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் – ஐசிசி திட்டம்!!

நேற்று மதியம் 3 மணி அளவில் துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தின் 10-வது ஓடுதளத்தில் தரை இறங்கிய விமானம் மழை காரணமாக வலிக்கிக்கொண்டு அருகில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்து இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளாகியது . இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் உயிரிழந்தனர். மற்ற பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

kerala flight accident
kerala flight accident

அதில் பயணம் செய்த ஷரஃபு என்னும் வாலிபர் தன மனைவி மற்றும் குழந்தையுடன் பயணித்து வந்தார். எப்பொழுதும் ஆன்லைன் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வரும் ஷரஃபு விமானம் புறப்படும் முன் பேக் டு ஹோம் என்று மனைவியுடன் முகக்கவசம் மற்றும் பேஸ் ஷீல்டு அணைத்தவாறு போட்டோ ஸ்டேட்டஸ் பேஸ்புக்கில் அப்டேட் செய்துள்ளார். ஆனால் விதி அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது. நடந்த விபத்தில் ஷரஃபு உயிரிழந்தார். அவரது மனைவியும் குழந்தையும் விபத்தில் தப்பி விட்டனர் ஆனால் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விமான விபத்திற்கு பாக்கிஸ்தான் மற்றும் அமெரிக்க நாடுகள் இரங்கல் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here