திவாலாகும் லட்சுமி விலாஸ் வங்கி?? ரிசர்வ் வங்கி அதிரடி கட்டுப்பாடுகள்!!

0

பல மாதங்களாக நிதி பற்றாக்குறையால் கடும் நஷ்டத்தில் திவாலாகும் நிலையில் இயங்கி வந்த லட்சுமி விலாஸ் வங்கி மீது பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு கணக்கில் இருந்தும் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி:

மத்திய நிதி அமைச்சகம் தனியார் துறையான லட்சுமி விலாஸ் வங்கி, நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை 30 நாட்கள் செயல்பட தடை விதித்துள்ளது. நிதி பற்றாக்குறையால் திவாலாகும் நிலைக்கு வங்கி சென்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு வாடிக்கையாளர் எந்தவொரு கணக்கிலிருந்தும் ரூ.25,000 வரை மட்டுமே எடுக்க முடியும். இந்த விதிமுறை அடுத்த 30 நாட்களுக்கு அமலில் இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இருப்பினும் மருத்துவம், உயர்கல்வி மற்றும் திருமண செலவுகள் போன்ற அவசரநிலைகளுக்கு ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியுடன் வாடிக்கையாளர்கள் ரூ.25,000 க்கும் அதிகமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. வங்கியின் நிதி நிலை மோசமடைந்து வரும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின் பேரில் இந்த அவசர முடிவை நிதி அமைச்சகம் எடுத்துள்ளது.

இது குறித்து தெரிவித்த ரிசர்வ் வங்கி, இந்த சூழ்நிலைகளில் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 45 ன் கீழ் வங்கிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மையத்திற்கு பரிந்துரை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என கூறியுள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரை தளமாகக் கொண்ட வங்கி சேவை நிறுவனமான டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்தையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. லட்சுமி விலாஸ் வங்கி அதன் இணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால், அதன் துணை நிறுவனமான டிபிஐஎல் ரூ.2,500 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

செய்யும் லட்சுமி விலாஸ் வங்கி, வி.எஸ்.என் ராமலிங்க செட்டியார் தலைமையில் 1926 ஆம் ஆண்டில் ஏழு தொழில்முனைவோரால் நிறுவப்பட்டது. ஜூன் 30, 2019 நிலவரப்படி, 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில்569 கிளைகள் இருந்தன. சுமார் 1,047 ஏடிஎம்கள் சேவையில் உள்ளன. இந்த வங்கியில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here