சமூகவலைதளத்தில் அத்துமீறிய ரசிகர் – பதிலடி கொடுத்த லட்சுமி மேனன்!!

0
lakshmi menon
lakshmi menon

சமூகவலைதளத்தில் நடிகை லட்சுமி மேனனிடம் ஆபாசமாக ரசிகர் ஒருவர் கேட்ட விஷயத்திற்கு நடிகை லட்சுமி மேனன் கெட்ட வார்த்தையில் தைரியமாக பதிலடி கொடுத்துள்ளார்.

லட்சுமி மேனன்

தமிழ் திரையுலகில் கால் பதித்த நயன்தாரா முதல் நஸ்ரியா வரை வெற்றிகரமான நடிகைகளாக இருக்கும் அனைத்து முன்னணி நடிகைகளுமே பெரும்பாலும் கேரளாவை பூர்வீகமாக கொண்டார்கள் தான். அந்த வரிசையில் இணைந்திருப்பவர் நடிகை லட்சுமி மேனன். 2012 ம் ஆண்டு வெளியான ‘கும்கி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக இருந்து வருபவர் லட்சுமி மேனன்.

நடராஜனுக்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த சரத்குமார் மற்றும் ராதிகா – வைரலாகும் வீடியோ!!

lakshmi menon
lakshmi menon

தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனன் விஜய் சேதுபதியுடன் ‘ரெக்கை’ என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து படிப்பிற்காக சினிமாவுக்கு சில காலம் விடுப்பு விடுத்து மீண்டுமாக நடிகர் விக்ரம் பிரபுவுடன் ஜோடியாக ‘புலிக்குத்தி பாண்டி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் இல்லாமல் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி மேனன் ரசிகர்களுடன் உரையாடிவருகிறார். அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் அவரிடம் உங்களது ஹாட்டான புகைப்படங்களை அனுப்புங்கள் என்று ஆபாசமாக கூறியுள்ளார். இந்த கேள்வியினால் ஆத்திரமடைந்த லட்சுமி மேனன் அந்த ரசிகரை அசிங்கமான வார்த்தையால் திட்டினவாறு பதிலலித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here