மரண மாஸாக வெளியான கேஜிஎப் 2 டீஸர் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

கடந்த 2018 ம் ஆண்டில் வெளியான கே.ஜி.எப்-1 படத்தின் வசூல் சாதனையை தொடர்ந்து உருவாக்கப்பட்ட கே.ஜி.எப்-2 படத்தின் பிரமாண்டமான டீஸர் நேற்று வெளியானது. கே.ஜி.எப் படத்தின் ஹீரோவாக நடித்திருக்கும் யாஷ் பிறந்தநாளை ஒட்டி டீஸர் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் டீஸர் நேற்று இரவு வெளியானது.

கே.ஜி.எப் – 2 டீஸர்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் மற்றும் நடிகர் ஸ்ரீநிதி நடிப்பில் வெளியான கே.ஜி.எப்- 1 படம் மிகப்பெரிய வசூல் சாதனை பெற்றது. கன்னடத்தில் வெளியான இப்படம் பின்பு தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட்ட பிற மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

80 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் 250 கோடி வசூல் செய்தது. இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தாயாரிக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த படத்தில் யாஷ் , பிரகாஷ்ராஜ், சஞ்சய் தத், ரவீனா தாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.

#IND vs AUS சிட்னி டெஸ்ட் – ஸ்மித் சதம்!! 338 ரன்களுக்கு ஆல் அவுட்!!

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தின் டீசர் ஜனவரி 8ம் தேதியான இன்று காலை 10.18 மணிக்கு நடிகர் யாஷ் பிறந்தநாளை ஒட்டி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் நேற்று டீசரின் ஒரு பகுதி இணையத்தில் வெளியானதால் நேற்று இரவே படத்தின் டீசர் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. கே.ஜி.எப் படத்தின் டீஸர் அதன் முதல் பாகத்தை போல மிக பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. டீஸர் வெளியான 10 மணி நேரத்தில் சுமார் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here