கேரள உள்ளாட்சி தேர்தல் நிலவரம் – ஆளும் இடதுசாரி வெற்றி, பாஜக பெரும் பின்னடைவு!!

0

கேரளாவில் உள்ளாட்சி துறைகளில் 1199 பேருக்கு அவர்களின் பதவிக்காலம் இந்த மாதம் டிச. 31ம் தேதியோடு முடிய உள்ள நிலையில் இந்த பதவிகளுக்கான தேர்தல் நான்கு கட்டங்களாக டிச .8 ,10,14 தேதிகளில் நடைபெற்றது. முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டு, ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக 10ம் தேதியன்று கோட்டயம்,எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு மாவட்டங்களிலும், மூன்றாம் கட்டமாக 14 ம் தேதியன்று மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்க்கோடு, ஆகிய மாவட்டத்திலும் நடந்து முடிந்தது. மொத்தம் 76.04 சதவீதத்திலான வாக்குகள் பதிவாகி இருந்தன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று காலை 8 மணிக்கு மாநிலத்தில் மொத்தம் 244 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ண தொடங்கப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தபால் வாக்குகளின் அடிப்படையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்தன.

தற்போதைய நிலவரப்படி, 6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 இடங்களில் ஆளும் கட்சியான இடதுசாரிகட்சி கூட்டணியும் முதல் இடத்தில் இருந்தது. 2 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று இரண்டாவது இடத்திலும் இருந்தது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் மட்டும் பா.ஜ.க 2வது இடத்தில் உள்ளது. மற்ற இடங்கள் அனைத்திலும் பா.ஜ.க பின்னடைவில் உள்ளது.

உலகளவில் கார் தயாரிப்பில் இந்தியா ஐந்தாம் இடம்!!

86 நகராட்சிகளில் 39 இடங்களிலும் இடதுசாரி கூட்டணியும், 37 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றது. 3 இடங்களில் மட்டுமே பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 11ல் இடது சாரி, 3ல் காங்கிரஸ் கூட்டணியும் உள்ளது. 152 ஊராட்சி ஒன்றியங்களில் 89ல் இடதுசாரி கட்சிகளும், 59ல் காங்கிரசும், 2ல் பா.ஜா.க வும் முன்னிலையில் உள்ளது. 941 கிராம ஊராட்சி ஒன்றியங்களில் 363ல் இடது சாரி கட்சிகளும், 318ல் காங்கிரஸ் கூட்டணியும், 32ல் பா.ஜ.கவும் முன்னிலை வகித்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here