
கோலிவுட் திரையில் நடிகர் மற்றும் நடன கலைஞராக வலம் வருபவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த ஜிகர்தண்டா படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்துள்ளார். இப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற பெயரில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் இதுவரை உலக அளவில் இப்படம் 52 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை இயக்க கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் குறித்து முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக இவர் 7 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார்.