தமிழகத்தில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்டா உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் விதைக்கும் சம்பா பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கான காலக்கெடு கடந்த 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், பலரும் விண்ணப்பிக்காதது தெரிய வந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இதன் காரணமாக நவம்பர் 22 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த காலக்கெடு நாளையுடன் முடிவடைய உள்ளதால் சம்பந்தப்பட்ட விவசாயிகள் விரைந்து பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளனர்.