
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவால் தான் தனக்கு இவ்வளவு கஷ்டம் என முத்து தினம் அவரை சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் மீனா முத்துவின் கஷ்டத்தை எப்படியாவது போக்க வேண்டும் என பல முயற்சிகளை எடுக்கிறார். நேற்றைய எபிசோடில் கூட வட்டிக்காரரிடம் சென்று முத்துவுக்கு வாடகை கார் கொடுக்கும் படி கெஞ்சுகிறார். அதே சமயத்தில் ரோகினி அந்த வீட்டிற்கு மசாஜ் வேலைக்கு வந்துள்ளார். மீனா வட்டிக்காரரிடம் கெஞ்சுவதை பார்த்து ரோகிணி நக்கலாக சிரிக்கிறார்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த விஷயத்தை வீட்டில் வந்து சொல்ல உடனே முத்துவுக்கு வேலை இல்லையா என மனோஜ் நக்கலாக பேசுகிறார். இப்படி இருக்கும் சூழலில் இனிவரும் எபிசோடுகளில் மீனா முத்துவின் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து விடுவாராம். மேலும் மனோஜ் பேசியதற்கு அவர் என்ன வேலை பார்க்கிறார் என கண்காணிப்பாராம். அவர் வேலையில்லாமல் இருப்பதை வீட்டில் வந்து சொல்லி நீ எல்லாம் என் புருஷனை பேசுறதுக்கு என்ன தகுதி இருக்கு என மனோஜை அசிங்கப்படுத்துவாராம். மேலும் ரோகிணியிடம் என் புருஷன் வேலை இல்லனாலும் ஏதோ ஒன்றுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்காரு. ஆனா உன் புருஷன் மாதிரி அடுத்தவங்க காசுல உட்கார்ந்து சாப்பிடல என அசிங்கப்படுத்துவாராம்.