ஒளிப்பரப்பு சட்டத் திருத்தம் பற்றி கார்த்திக் சுப்புராஜ் கருத்து…! ‘அது கலையுலக கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு பெரிய அடி’ என பதிவு!!!

0

மத்திய அரசு கடந்த 18ம் தேதி   ஒளிப்பரப்பு   சட்டத் திருத்த வரைவு மசோதா வெளியிட்டது. இது வெளியிடப்பட்ட நாளிலிருந்தே பல திரைத்துறையினர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னணி இயக்குனராக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார். அதாவது இந்த மசோதா கலையுலக கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு பெரிய அடியாக இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

இந்த  ஒளிப்பரப்பு   சட்ட திருத்த வரைவு மசோதா வெளியிடப்பட்ட அன்றிலிருந்து  நாடு முழுக்க பல்வேறு திரைதுறையை சார்ந்தவர்களும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதாவது இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டு போன்றவைகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன. இந்த சட்டத்திருத்தம் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறி விடும் என சினிமா துறையை சார்ந்த வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை சினிமா பிரபலங்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் உள்ளிட்ட 1400 கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து  கடிதம் எழுதினர்.

அதேபோல், நடிகர் கமல்ஹாசன் சினிமா, ஊடகம், கல்வி ஆகிய மூன்றும் இந்தியாவில் பலரும் அறிந்த மூன்று குரங்குகளாக மட்டுமே இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டு புதிய  ஒளிப்பரப்பு   சட்ட திருத்த வரைவிற்கு ஏதிரான தனது கருத்தை தெரிவித்து இருந்தார். மேலும்  நடிகர் சூர்யா “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக, அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல” என கூறி தனது  எதிர்ப்பை ட்விட்டர் வாயிலாக  தெரிவித்துள்ளார். சூர்யாவை தொடர்ந்து தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்  தனது ட்விட்டர் பதிவில் , “ ஒளிப்பரப்பு   திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது கலையுலக கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு பெரிய அடியாக இருக்கும்” என கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here