தனது வீட்டையே கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றிய அமைச்சர் – நெகிழ்ச்சியில் மக்கள்!!!

0
தனது வீட்டையே கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றிய அமைச்சர் - நெகிழ்ச்சியில் மக்கள்!!!
தனது வீட்டையே கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றிய அமைச்சர் - நெகிழ்ச்சியில் மக்கள்!!!
கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, ஹவேரி மாவட்டத்தின் ஷிகான் நகரில் உள்ள தனது வீட்டை கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றியுள்ளார். தற்போது இந்த மருத்துவமைய வளாகத்தில் 50 நோயாளிகள் வரை தங்க முடியும். நோயாளிகளை கவனித்துக்கொள்வதற்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ செவிலியர்களையும் அமைச்சர் நியமித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும், மூத்த ஜனதா பரிவார் தலைவருமான மறைந்த எஸ் ஆர் பொம்மாயின் மகனான இவர், மாநில அமைச்சரவையில் சட்டம் மற்றும் நாடாளுமன்ற துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார். இதற்கிடையில், கர்நாடக மாவட்டம் பெலகாவியில் 50 படுக்கைகள் கொண்ட ஒரு பிரத்யேக COVID19 சிகிச்சை மையத்தை துணை முதல்வரும் போக்குவரத்து அமைச்சருமான லக்ஷ்மன் சவாடி ரூ .50 லட்சம் செலவில் அமைக்க உள்ளார்.மே 7 முதல் 13 வரையிலான வாரத்தில் கர்நாடகாவில் 3500 கொரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர்.
தனது வீட்டையே கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றிய அமைச்சர்
தனது வீட்டையே கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றிய அமைச்சர்

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது தொற்றுநோய் பரவ தொடங்கியதில் இருந்து பதிவான எண்ணிக்கையை விட அதிகமாகும்.கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் ஜூன் மாதத்தில் குறையும் என்று அம்மாநில அரசு மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்து உள்ளது. மேலும் கர்நாடகாவில் அமலில் இருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த முடியுமா என்றும் அரசு ஆலோசித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here