விக்ரம் படத்தால் இயக்குனர் நெல்சனுக்கு வந்த சோதனை.. ட்விட்டரில் ட்ரெண்டிங்காகும் கலக்கல் மீம்ஸ்!!

0
விக்ரம் படத்தால் இயக்குனர் நெல்சனுக்கு வந்த சோதனை.. ட்விட்டரில் ட்ரெண்டிங்காகும் கலக்கல் மீம்ஸ்!!

கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல ஹிட்டை கொடுத்து வருவதால் கமல் அனைவர்க்கும் பரிசாக சில அன்பளிப்புகளை வழங்கி வருகிறார். இதனை நெட்டிசன்கள் கிண்டல் செய்து மீம்களாக கிரியேட் செய்து ஷேர் செய்து கொண்டிருக்கின்றனர்.

கமலின் அன்பளிப்பு:

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 அன்று திரையரங்களில் வெளியானது. நினைத்ததை விட விக்ரம் திரைப்படம் நல்ல ஹிட்டை கொடுத்ததால் லோகேஷ் கனகராஜ்க்கு அன்பு பரிசாக கமல் 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வழங்கினார்.

மேலும், விக்ரம் திரைப்படத்திற்காக பணியாற்றிய அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் கமல் பரிசு வழங்கினார். இதுமட்டுமல்லாமல் விக்ரம் திரைப்படத்தில் சூர்யா வெறும் 3 நிமிட காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட இவர் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பயட்டு வருகிறது.

இதனால் சூர்யாவிற்கு அன்பு பரிசாக கமல் தனது கையில் அணிந்திருந்த 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள ரோலக்ஸ் கை கடிகாரத்தை வழங்கினார். விக்ரம் திரைப்படம் நல்ல ஹிட்டை பெற்றதால் கமல் அனைவருக்கும் பரிசு வழங்குவதை மீம்களாக நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு முறை லோகேஷ் விக்ரம் திரைப்படம் சார்ந்து வைரலாகும் போது, காரணமே இன்றி நெல்சன் பாதிக்கப்படுகிறார். தற்போது கமல் கொடுத்த காரில் நெல்சனை கடுப்பேற்றி லோகேஷ் கனகராஜ் கமலையும் அழைத்து கொண்டு ரைடு போவது போன்றும் மீம் ஷேர் செய்து கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here