வேலை தேடும் நபர்களே உஷார்., இதை நம்பி ஏமாறாதீங்க – தேசிய தகவல் மையம் எச்சரிக்கை!!

0

வேலை தேடும் நபர்களுக்கு, தங்கள் நிறுவனம் அனுப்புவதாக கூறி போலியான குறுந்தகவல்களை அனுப்பி வருவதாகவும், இதில் சிக்கி ஏமாற வேண்டாம் என்றும் தேசிய தகவல் மையம் எச்சரித்துள்ளது.

பகீர் எச்சரிக்கை :

கொரோனா கால கட்டத்திற்கு பிறகு, வேலைவாய்ப்பு என்பது குதிரைக் கொம்பாகி விட்டது. பெரும்பாலான நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை குறைத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், வேலை கிடைப்பது என்பதே மிகப்பெரிய ஒன்றாகிவிட்டது. இந்த நிலையில், வேலை வாய்ப்பு தருவதாக சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல தகவல்கள் உலா வந்த வண்ணம் இருக்கிறது.

இதில் பல மோசடிகள் நடந்து வருவதாக சமீப காலமாக புகார்கள் எழுந்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தேசிய தகவல் மையம் (NIC), தங்கள் பெயரை பயன்படுத்தி போலியான குறுந்தகவல்களை, சிலர் பரப்பி வருவதாகவும், இது போன்ற மோசடிகளில் சிக்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

இது போன்ற சிக்கல்களை சந்திக்க நேர்ந்தால் உடனடியாக [email protected] மற்றும் https://cybercrime.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அளிக்குமாறு கேட்டுள்ளது. மேலும் தங்கள் நிறுவனத்தின், பெயரை தவறாக பயன்படுத்தும் மோசடிதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here