சென்னை: தொடர்ந்து அதிரடியாக குறைந்து வரும் தங்க விலை – குஷியில் நகைப்பிரியர்கள்!

0
சென்னை: தொடர்ந்து அதிரடியாக குறைந்து வரும் தங்க விலை - குஷியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: தொடர்ந்து அதிரடியாக குறைந்து வரும் தங்க விலை - குஷியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: தொடர்ந்து அதிரடியாக குறைந்து வரும் தங்க விலை – குஷியில் நகைப்பிரியர்கள்!

சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து நகைப்பிரியர்களை சுற்றலில் விட்ட தங்கத்தின் விலை இன்று ஓரளவு தளர்ந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். அதாவது ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38,792 க்கு விற்பனையாகி வருகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை :

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக ஒவ்வொன்றின் மீதும் தனி ஈர்ப்பு இருக்கும் என்பது மனித இயல்பு. குறிப்பாக பெண்கள் என்றாலே நினைவுக்கு வருவது ஆபரண தங்க நகைகள் தான். அதுவும் வீட்டில் நடைபெறும் ஒவ்வொரு சுப காரியங்களுக்கும் பெண்கள் ஆசையாக அணிந்து கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பது தங்க நகைகள் தான். இது தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் ஒன்றாகவே மாறிவிட்டது. ஒரு பொருளுக்கு மவுசு கூடினால் அதை அடைவது அவ்வளவு சுலபம் இல்லை.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அது போல, அன்றிலிருந்து இன்றுவரை எட்டாத உயரத்திற்கு எகிறி செல்லும் தங்க நகைகளை வாங்குவது என்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாடாகவே உள்ளது. ஏனெனில் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒவ்வொரு கிராமும் எக்கச்சக்க விலையில் விற்பனையாகி வருகிறது. அதாவது, தங்கம் விலை கடந்த சில மாதமாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூலையில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு உயர்த்தியது. இதையடுத்து தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,792 க்கு விற்பனையும், கிராமுக்கு ரூ.6 குறைந்து, ரூ.4,849 க்கு விற்பனையும் ஆகிறது. மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து, ரூ.63.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு எதிர்பாராத வகையில் தங்க விலை சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதால் சாதாரண மக்கள் முதல் நகைப்பிரியர்கள் வரை பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். ஆனாலும் இன்று ஓரளவு குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here