சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்த பும்ரா.. வெளியான நியூ அப்டேட்!!

0
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி) மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப ஒவ்வொரு வாரமும் தரவரிசைப் பட்டியலை புதுப்பித்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று (பிப்ரவரி 7) டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான பட்டியலை  வெளியிட்டிருந்தது. அதில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஜஸ்ட் பும்ரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இதன் மூலம் வரலாற்று சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். அதாவது, டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வடிவங்களிலும் முதலிடம் பெற்ற முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.  மேலும் கடந்த 100 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் ஆவரேஜ் வைத்திருக்கும் ஒரே வீரர் இவர்தான் என்பது சிறப்புக்குரியது. தற்போது இவருக்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here