ஜப்பான் நிலநடுக்கம்., அதிகரிக்கும் உயிர் பலி., பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு!!!

0
ஜப்பான் நிலநடுக்கம்., அதிகரிக்கும் உயிர் பலி., பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு!!!
பூமிக்கு அடியில் அதிக அழுத்தம் கொடுக்கப்படும் பட்சத்தில் நில தட்டுகள் நகர்வதையே நிலநடுக்கம் என அழைக்கப்படுகிறது. இதன் அளவுகளை ரிக்டர் மூலம் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி ஜப்பானில் உள்ள இஷிகாவா என்ற மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவில் நில அதிர்வுகள் பதிவானது. இதனால் 40க்கு மேற்பட்டோர் உயிழந்தனர்.   இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
இதை தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் உயிர் மற்றும் பொருட் சேதங்கள் குறித்து கணக்கிட அரசு குழு அமைந்துள்ளது, இந்நிலையில் நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளதாகவும், 400க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது., மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்புள்ளதாக  அறிவித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here