கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி, ஜனவரி 15 முதல் பயன்பாடு – மத்திய அரசு ஒப்புதல்!!

0
.The Union Minister for Environment, Forest & Climate Change, Information & Broadcasting and Heavy Industries and Public Enterprise, Shri Prakash Javadekar holding a press conference on Cabinet Decisions, in New Delhi on October 21, 2020.

இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக விரைவில் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். மேலும் இந்த தடுப்பூசி பயன்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா:

உலக நாடுகள் அனைத்திருக்கு கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் வைரஸ் பரவி மக்கள் அனைவரையும் துன்புறுத்தி வருகின்றது. கொரோனா தடுப்பூசிக்கான ஆராய்ச்சியை உலக நாடுகள் அனைத்தும் மிகவும் தீவிரமாக செய்து வருகிறது. தற்போது உலக நாடுகள் சிலர் தங்களது நாட்டு மக்களுக்காக அவசர கால தடுப்பூசியை வழங்கி வருகின்றது. அதேபோல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான பயிற்சி சில தினங்களாக நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

new corona strain
new corona strain

சில தினங்களுக்கு முன் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி வழங்குவது மற்றும் தடுப்பூசி போடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல் இன்று தமிழ் நாட்டில் சில இடங்களில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு எந்த முறையில் வழங்க வேண்டும் மேலும் கொரோனா தடுப்பூசியை பதப்படுத்தும் முறை போன்றவற்றை கற்பிப்பதற்காக பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது.

சீன நபர்களுக்கு, ஆன்லைன் கடன் செயலிகளுடன் தொடர்பு – காவல் ஆணையர் எச்சரிக்கை!!

மேலும் மத்திய அரசு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ என்ற கொரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் பரிசோதனை செய்து, உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை வழங்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

Prakash Javadekar
Prakash Javadekar

மேலும் அவர் கூறியதாவது ‘ஹைதராபாதை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம் மற்றும் இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து கோவேக்சின் என்னும் பெயரில் தடுப்பூசி ஒன்றை தயாரித்துள்ளது. மேலும் ஆக்ஸ்போர்டு, பாரத் பயோ டெக் மற்றும் அமெரிக்கா பைசர் ஆகிய நிருவனங்களும் தங்களது கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்போது இந்தியாவில் 4 கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்ற அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here