வீட்டின் முன்னால் பிரபல டிவி நடிகை சுட்டுக்கொலை – உருக்கமாக பதிவிட்ட மாநில முதல்வர்!!

0
வீட்டின் முன்னால் பிரபல டிவி நடிகை சுட்டுக்கொலை - உருக்கமாக பதிவிட்ட மாநில முதல்வர்!!
வீட்டின் முன்னால் பிரபல டிவி நடிகை சுட்டுக்கொலை - உருக்கமாக பதிவிட்ட மாநில முதல்வர்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல டிவி நடிகை அம்ரீனா பட் என்பவரை, 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 தீவிரவாதிகள் பயங்கரம் :

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல டிவி நடிகை அம்ரீனா பட் . 35 வயதான இவர் காஷ்மீரில் இருக்கும் ஹஸ்ரூ என்ற பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவரது சகோதரரின் 10 வயது மகன் மற்றும் இவரை, தீவிரவாதிகள் 3 பேர் வீட்டிற்கு வெளியே வைத்து சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த நடிகை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, சிறுவனின் உயிருக்கு பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, 3 தீவிரவாதிகளை தேடும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இதுகுறித்து மாநில முதல்வர் உமர் அப்துல்லா ட்விட்டரில், உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதாவது, இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் மிகவும் கண்டிப்பதற்கு உரியது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செயல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here