ஜம்மு – காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா?? – இன்று தீர்ப்பு

0
ஜம்மு - காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா - இன்று தீர்ப்பு

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டவுடன் அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரால் தொடங்கப்பட்ட வழக்குகளுக்கு இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

சிறப்பு அந்தஸ்து நீக்கம்

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அது இரண்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதனால் அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதுமட்டுமில்லாமல் ஜம்மு – காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here