வசூலில் பட்டையை கிளப்பும் “ஜெயிலர்” திரைப்படம்.., மொத்தம் இத்தனை கோடி வசூலா?

0
வசூலில் பட்டையை கிளப்பும்
வசூலில் பட்டையை கிளப்பும் "ஜெயிலர்" திரைப்படம்.., மொத்தம் இத்தனை கோடி வசூலா?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் நெல்சன் – ரஜினி காம்போவுடன் இணைந்து சிவராஜ்குமார்,மோகன் லால், தமன்னா, சுனில் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி இப்படத்தின் வெற்றிக்கு ராக் ஸ்டார் அனிருத் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த அளவுக்கு மியூசிக் போட்டு அனைவரது பார்வையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார். இப்படி இந்த வெற்றியை கொண்டாடி வரும் படக்குழு அதிர்ச்சி தரும் விதமாக நேற்று ஜெயிலர் படத்தின் HD பிரிண்ட் இணையத்தில் வெளியானது. இதனால் படக்குழு மட்டுமின்றி ரசிகர்களும் சோகத்தில் மூழ்கி கிடந்தன.

என்னது.., வீடு மட்டும் ரெண்டு இல்லையா.., பிக்பாஸும் 2 தானா? இது என்னடா புதுசா இருக்கு!!!

இருப்பினும் தியேட்டரில் ஜெயிலர் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் மொத்த வசூல் விவரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இதுவரை உலக அளவில் 590 கோடியை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் 600 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here